சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்..... உறவினர்கள் உடந்தை.....
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனுக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகிய 17 சிறுவன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து, இந்த விஷயம் சிறுவனின் வீட்டிற்கு தெரிய வந்தது.
சிறுவனின் தந்தை முத்துராஜ், உறவினர்கள் ருத்ரா, கல்யாணசுந்தரம், தர்மதுரை ஆகியோர் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளனர். எனவே, அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று கருவை கலைக்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால் கருவை கலைக்க முடியாது என்று மருத்துவர் கூறியதால், விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என்று சிறுமியை சிறுவனின் உறவினர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், சிறுவனுக்கு உடந்தையாக இருந்து சிறுமியை மிரட்டிய அவனது உறவினர்கள் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் வழக்கு குறித்து அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments