• Breaking News

    சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற துவக்க விழா


     ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  வணிக நிர்வாகவியல் துறையில் 2023- 24 ஆம் கல்வியாண்டின் வணிக நிர்வாகவியல் மன்ற துவக்க விழா கல்லூரி முதல்வர் முனைவர். க. ராதாகிருஷ்ணன்  தலைமையில்  நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்தவர்களை வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் க.  பொங்கியண்ணன்  வரவேற்றார். முனைவர் .N. பார்த்திபன்  வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரை பற்றிய அறிமுக உரையை   முனைவர்.P. பூர்ணிமா யோகேஸ்வரி   வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய குறிப்புரைகளை முனைவர்.A. பிரேம் குமார்  வழங்கினார். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, ப்ராஜெக்ட் அசோசியேட் T. கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக நிர்வாகவியல் மன்ற நிகழ்வுகளை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்து தொழில் முனைவோர் பற்றியும், புதிதாக தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணாக்கர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மன்ற துவக்க விழா நிகழ்ச்சியினை முனைவர்  B. பரிதா  தொகுத்து வழங்கினார். இறுதியாக மூன்றாம் ஆண்டு மாணவி ஓவியா நன்றியுரை ஆற்றினார்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471.

    No comments