நாகை அரசு உதவி பெறும் ADM மகளிர் கல்லூரியில் இயற்கையை பாதுகாக்க மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பு துவக்கம்


நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில்  அரசு உதவி பெறும் ADM மகளிர்  கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இயற்கையை மாசுபடுத்தாமல் பாதுகாக்க சேவை புரியும் மாணவர்கள் எக்ஸனோரா அமைப்பு துவங்கி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் அன்புச் செல்வி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர்பாரி , இண்டர்நேஷனல் யூத் எக்ஸ்னோரா நிறுவனர் மோகன்  ஆகியோர் கலந்துக் கொண்டு புதிய மாணவர்கள் எக்ஸ்னோரா நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தனர்.

 தொடர்ந்து அமைப்பின் உறுதி மொழிகளை மாணவிகள் எடுத்துக் கொண்டனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் கல்லூரி் எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் செல்வி, கல்லூரியின் மாணவர் தலைவர் அன்புபாரதி மற்றும் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments