நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியானது வங்க கடற்கரையோரம் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமாகும். இப்பகுதியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா திருத்தலம் கிறிஸ்துவ தலைமையிடமான வாடிகன் சிட்டி பசிலிக்கா (திருத்தல பேராலயம்) அந்துஸ்து வழங்கியுள்ளது. புனித ஆரோக்கிய மாதா தரிசனம் பெற வேண்டி ஆண்டு தோறும் நடைப்பெறும் திருவிழா காலங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளும், சுற்றுலாப்பயணிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உலகளவில் வந்தவண்ணம் உள்ளனர். மேலும் தினசரி கமார் 15000 ம் சுற்றுலா பயணிகளும், வார இறுதி நாட்களில் 25000 த்திற்கும் மேற்பட்ட சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளும் வந்து செல்லும் பகுதியாகும்.
இப்பேரூராட்சி பகுதியானது நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து கிழக்கு பகுதியில் வங்க கடலோரம் அமைந்துள்ளது. பின்வரும் மாதங்களில் நடைப்பெறும் கிருஸ்துவ பண்டிகை நாட்களில் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சத்திற்கும் மேம்பட்ட திருப்பயணிகள் பேரூராட்சி பகுதிக்கு சுற்றுலா பேரூந்துகள். கார் மற்றும் வேன்கள் என அதிக அளவில் வருகைப்புரியும் சுற்றுலா வாகனங்கள் யாவும், நகரின் நுழைவாயிலான ஆர்ச் பகுதியிலிருந்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பிரதான மெயின் ரோடு வழியாக பேரூந்து நிலையம் வந்தடையும்.
வார இறுதி நாட்களில் ஆர்ச் முதல் பேரூந்து நிலையம் வரை உள்ள சாலையில் தொடர்ச்சியாக பேரூந்துகளும், சுற்றுலா வாகனங்கள் எதிர்திசையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத சூழ்நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இச்சாலையானது அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் யாவும் இச்சாலையினையே பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றன.
எனவே வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு வருகைப்புரியும் பேரூந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் யாவும் நகரின் மையப்பகுதியான பேரூந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்து தளங்களுக்கு பிரதான சாலை வழியாக வருகைப்புரியும் வாகனங்ளை மாற்று வழி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையினை சென்றடையும் வகையில், புதிதாக ஒரு மாற்று வழிசாலையினை தேர்வு செய்து உருவாக்கினால், இப்பேரூராட்சி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை முற்றிலும் தவிர்க்க இயலும். மேலும் இந்த கால கட்டத்தில் அவரச கால ஊர்திகளான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையும் அவ்வபோது உருவாகின்றது.
இது குறித்து ஏற்கனவே பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் தலைமையில் வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு செய்யப்பட்டு மாற்றுவழி சாலை தேர்வு செய்யப்பட்டபோது, மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் மேற்படி பணியினை நெடுஞ்சாலை துறை மூலம் நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள். . ஆனால் இதுநாள் வரையில் மாற்று வழிச்சாலை அமைத்திட நில எடுப்பு பணிகளோ அல்லது மேற்படி மாற்று வழி சாலை உருவாக்கிட உரிய நிதி ஒதுக்கீடுகளோ இது நாள் வரையில் எதுவும் செய்யப்படவில்லை. எனவே இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவு ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் விதமாக வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு என ஒரு மாற்று வழிச்சாலையினை உருவாக்கிட துரிதமாக நில எடுப்பு பணிகள் மேற்கொண்டு நீண்ட நாள் கோரிக்கையான மாற்று வழிச்சாலையினை உருவாக்கிட வேண்டி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.என்று வேளாங்கண்ணி பேரூராட்சித் துணைத் தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் மனு கொடுத்துள்ளார்.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க
No comments:
Post a Comment