குத்தாலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, September 18, 2023

குத்தாலத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் குத்தாலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குத்தாலம் நவ்ஹார் பைனான்ஸ் மற்றும் ஜுவல்லர்ஸ் குத்தாலம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அறையபுரம் தமிழரசன் நினைவாக மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இலவச கண் பரிசோதனை முகாம் குத்தாலம் லயன்ஸ் சங்க தலைவர் பார்த்திபன்  தலைமையில் நடத்தது. இம்முகாமினை பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன்,பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் சம்சுதீன், ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.பின்னர் முகாமில் 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக ரத்த கொதிப்பு,சர்க்கரைநோய் பரிசோதனை, செய்யப்பட்டது.கிட்டப் பார்வை, தூரப்பார்வை,வெள்ளெழுத்து பார்வை குறைபாடு கம்ப்யூட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.தொடர்ந்து கண் நோய்களுக்கு சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் வந்து மருத்துவர்களிடம் அவர்களது கண்களை பரிசோதனை செய்து ஆலோசனை பெற்று சென்றனர்.இம்முகாமிற்க்கு 345 பயனாளிகள் கலந்து கொண்டதில் 110 பேர் அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி கண் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதில் லயன்ஸ் அமைச்சரவை ஆலோசகர் டாக்டர் சிக்கந்தர் ஹயாத்கான்,லயன் மண்டல தலைவர் செந்தில் வைரவன்,வட்டார தலைவர் லயன் மகாலிங்கம்,முன்னாள் மண்டல தலைவர் லயன் ராஜ்குமார்,சின்னதுரை,முத்துக்குமார், கருப்புசாமி,பொருளாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment