நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரணயம் வட்டம்,குரவபுலம் பாயின்ட் காலிமர் பன்னாட்டு பள்ளியில் நாகப்பட்டி னம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அஸோசியேஷன் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்றது.
முன்னதாக பாயின்ட் காலிமர் பன்னாட்டு பள்ளியின் தலைவர் சுல்தானுல் ஆரிஃபீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.போட்டி முதலில் தார்ச்சாலையில் (ரோடு ரேஸ்) நடைபெற்றது.தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சிராஜீனிச பேகம் சிறப்புரையாற்றி மற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளை தொடங்கி வைத்தார். வயது வாரியாக ரிங்க்1 முதல் ரிங்க் 6 வரையிலான போட்டிகளும்.ரோடு ரேஸ் 1 முதல் 5 வரையிலான போட்டிகளும் நடத்தப்பெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று விளையாட்டு வீரர்களுக்கு தங்கம். வெள்ளி,மற்றும் வெண்கல பதக்கங்கள் பரிசு அளிக்கப்பட்டன.வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவட்ட அளவிலான போட்டியில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை. சீர்காழி பகுதிகளை சேர்ந்த சுமார் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் தலைவர் விசாலாட்சி ஒருங்கிணைப்பாளர், நாகப்பட்டினம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோஸியேஷனின் இணைசெயலாளர் மற்றும் மாவட்ட பயிற்சியாளர் பாரதி, செயலாளர் கவிதா, மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க
No comments:
Post a Comment