4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டம் - MAKKAL NERAM

Breaking

Thursday, September 14, 2023

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டம்

 


வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இதில் மாவட்ட வாரியாக முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்க அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment