உடல் நலம் பேணுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி மயிலாடுதுறையில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, October 7, 2023

உடல் நலம் பேணுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி மயிலாடுதுறையில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி நடைபெற்றது. உடல் நலனை பேணும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தருமபுரம் ஆர்ச் வழியாக இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு அரங்க வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. 17 வயது முதல் 25 வயது வரை ஒரு பிரிவும் 25 வயதிற்கு மேற்பட்டோர் மற்றொரு பிரிவு என்று ஆண்கள் பெண்கள் என தனித்தனியே நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  மகாபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment