கரூர் மாவட்டம் தனியாக செயல்பட துவங்கி 28 ஆண்டுகள் ஆகியும்,கரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைமைச் சிறை இல்லாததால் போலீஸார் வேதனை - MAKKAL NERAM

Breaking

Wednesday, October 25, 2023

கரூர் மாவட்டம் தனியாக செயல்பட துவங்கி 28 ஆண்டுகள் ஆகியும்,கரூர் மாவட்டத்தில் மாவட்ட தலைமைச் சிறை இல்லாததால் போலீஸார் வேதனை


கடந்த 1995 கரூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனை என கரூர் மாவட்டத்தை மையமாக கொண்டு பல துறைகளைச் சார்ந்த தலைமை அலுவலகங்கள் இருக்கும் இந்த நிலையில்,கரூர் மாவட்டத்திற்கு என்று தலைமைச் சிறைச்சாலை இதுவரை கட்டப்படாததால் கரூரிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருச்சி மத்திய சிறைக்கு கைதிகளை போலீசார் அழைத்து செல்கின்றனர்.

இதனால் போலீசா இருக்கோ கைதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கரூர் கிளை சிறை மற்றும் குளித்தலையில் கிளைச்சிறை உள்ள நிலையில் சிறைகளில் அதிகபட்சமாக சுமார் 70 கைதிகளை வரை மட்டுமே அடைக்க முடியும். 


மேலும் கொலை கொள்ளை மற்றும் கொடூர சம்பவங்களில் ஈடுபடும் கைதிகளை திருச்சி மத்திய சிறைக்கு மட்டுமே அழைத்துச் செல்லும் அவல நிலையில் கரூர் மாவட்ட காவல் துறையினர் உள்ளனர். மேலும் கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர் படுத்த நாள்தோறும் திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் போலீசாருக்கு மட்டுமல்ல கைதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி உள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டத்திற்கு என்று தனியாக தலைமை சிறை கட்ட அரசு அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அந்தப் பணியில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது வருத்தத்துக்குள்ளாகிய விஷயமாகும்.


பொதுமக்கள், போலீசார், மற்றும் கைதிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்திற்கு என்று தனி தலைமைச் சிறை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்பு.


கரூர் மாவட்ட செய்தியாளர் எம்.எஸ்.மோகன்ராஜ்

93857-82554

No comments:

Post a Comment