நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த தேவூரில் அமைந்துள்ள பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 13 ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சி நாளில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்து வருகிறார்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான மகா சண்டி யாகம் மற்றும் சரஸ்வதி மகா யாகம் நடைபெற்றது. கோ பூஜை, சுகாசினி பூஜை,வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை,யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சரஸ்வதிதேவி யாகத்தின் பொழுது சரஸ்வதி தேவி அக்னி ரூபத்தில் காட்சியளிப்பது தனிசிறப்பாகும். 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு உகந்த தங்க நகை, திரவியங்கள்,பழங்கள் ,108 மூலிகைகள் ,சுத்த தரியினால் நெய்யப்பட்ட புடவை, திருமாங்கல்யம், வெள்ளி கொலுசு ஆகியன கொண்டு யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.இந்த பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என ஐதீகம். மேலும் யாகத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சரஸ்வதி தேவியின் உருவம் பதித்த வெள்ளி டாலர் பிரசாதங்கள், மங்களப்பொருட்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன .
நாகை நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment