ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை அருகே உள்ள ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சரஸ்வதி பூஜை கல்லூரியின் நூலகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் ஏவிசி கல்வி நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கட்ராமன் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன்,தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் ஜி.ரவிசெல்வம், ஏவிசி பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர்கள் எம்.செந்தில்முருகன், ஏ.வளவன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் திரளான பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பட விளக்கம்:-
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடந்த சரஸ்வதி பூஜை விழாவில் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடராமன் கலந்து கொண்டார்.
No comments