தேசிய நூறு நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களை பவானிசாகர் எம்எல்ஏ நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்
ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம் புங்கம்பள்ளி மாதா பாளையம் பகுதியில் தேசிய நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களை
பவானிசாகர் எம் எல் ஏ அ.பண்ணாரி நேரில் சந்தித்து பணியாளர் களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பணியாளர்கள் விடுத்த கோரிக்கையான கடந்த மூன்று வாரங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளதால். உடனடியாக நிலுவைத் ஊதிய தொகையை விடுவிக்க கேட்டுக்கொண்டதன் பேரில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அவர்களிடம் தொடர்புகொண்டு நிலுவை ஊதிய தொகையை விரைவாக பணியாளர்களுக்கு தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில்.
விரைவில் நிலுவை ஊதிய தொகையை விடுவிப்பதாக ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன் , சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.பிரபாகரன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவி , பவானிசார் வடக்கு ஒன்றிய விவசாயி பிரிவு செயலாளர் ஏ.சோமசுந்தரராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments