நாகப்பட்டினம் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நாகூர் மாணிக்கம் செட்டியார் தொடக்கப்பள்ளியில் 7 நாட்கள் நடைபெற்றது.
ஏழாம் நாள் வெள்ளிக்கிழமை நாகூர் கிழக்கு கடற்கரை சாலையின் ஓரத்தில் பனை விதை நடும் பணி நாகை நகர மன்ற தலைவர் இரா. மாரிமுத்து தொடங்கி வைத்தார் நாகூர் நகர மன்ற உறுப்பினர் ரஞ்சித் எம் சி தியாகராஜன் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் பிலிப்ராஜ் உடற்கல்வி இயக்குனரும் திட்ட அலுவலருமான முனைவர் ராஜா ஹென்றி ஆய்வக உதவியாளர் கனக ராயன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட பனை விதை நடவு செய்தனர்.
பின்னர் நாகூர் மாணிக்கம் செட்டியார் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் நாகை புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் மரிய ஜோசப் நாகூர் மாணிக்கம் செட்டியார் துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜய பாரதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள் உடற்கல்வி இயக்குனரும் திட்ட அலுவலருமான முனைவர் ராஜா ஹென்றி நன்றி கூறினார்.
நாகை நிருபர் சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment