நாகை: வடுகச்சேரி கிராமத்தில் தொடர் திருட்டு - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

நாகை: வடுகச்சேரி கிராமத்தில் தொடர் திருட்டு

 


நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கிராம பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். நான்கு நாள்களுக்கு முன்னதாக உறவு முறையின் இல்லத்திற்கு திருப்பூர் சென்றுள்ளார்.சம்பவம் தெரிந்து மர்ம நபர்கள் நேற்று இரவு வாயிற் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பின்பு வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள பத்தாயிரம் ரூபாய் மதிப்புமிக்க பணத்தையும் ஒரு பவுன் தங்கமும் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் காலையில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில் பூட்டு உடைந்து கிடந்ததை  கண்டு வியந்து அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

சம்பவ இடத்திற்கு வேளாங்கண்ணி போலீசார் விரைந்து வந்து விசாரித்து கைரேகை நிபுணர்களை வைத்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசாரர்கள் கூறி வருகின்றனர்.15 நாட்களுக்கு முன்னர் சம்பவ இடத்திற்கு அருகாமையில் மின் மோட்டார் திருட்டுப் போனது என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் நேரம் செய்திகளுக்காக நாகை மாவட்டம் நிருபர் சக்கரவர்த்தி 


புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment