ரவுடிகளுக்கு உடந்தையாக இருந்த காவலர் பணியிடை நீக்கம் - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

ரவுடிகளுக்கு உடந்தையாக இருந்த காவலர் பணியிடை நீக்கம்

 


செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் கோகுல் (வயது 33). இவர் தற்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்தார்.



இந்த நிலையில் கோகுல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில ரவுடிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு வந்ததாகவும், ரவுடிகளிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து கொண்டு போலீசாரின் ரகசிய தகவல்களை குற்றவாளிகளுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.



இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதனை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் போலீஸ்காரர் கோகுல் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கோகுலை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment