பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்ட SDPI கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் அக்பர் அலி அவர்கள் தலைமையில் இன்று (அக்.12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் யாமின்,SDTU மாவட்ட தலைவர் சேக் அலா,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் R.N.அமிர்த ராஜா,ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் மாவட்ட பொருப்பாளர் ஜெஹபர் சாதிக் மற்றும் எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட,தொகுதி,கிளை நிர்வாகிகள்,செயல்வீரர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதராகவும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் தங்களது கண்டனங்களை கோஷங்களாக எழுப்பிய பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி
No comments:
Post a Comment