• Breaking News

    ஏ.வி.சி கல்லூரியில் பொருளாதார மன்ற சிறப்புக் கூட்டம்


    மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி பொருளாதாரத் துறை சார்பில் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது. 

    கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார் . பொருளாதார மன்ற கூட்டத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் கே.தாமோதரன் *"2070க்குள் கார்பன் இல்லா இந்தியா உருவாவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். முன்னதாக பொருளாதார துறைத் தலைவர் டாக்டர் ஆர் . கார்த்திகேயன் வரவேற்றார். கூட்டத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியர்கள்,  பிற துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பொருளாதாரத்துறை மாணவ ஒருங்கிணைப்பாளர் கே. ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாதாரத் துறை மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஆர்.உள்ளமுடையார் மற்றும் பொருளாதாரத்துறை பிற பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    பட விளக்கம்:-

    மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி பொருளாதாரத்துறை சார்பில் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது.

    No comments