திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பேத்தியுடன் தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Friday, October 13, 2023

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பேத்தியுடன் தரிசனம் செய்தார் துர்கா ஸ்டாலின்

 


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஏழுமலையான் தரிசிக்க குடும்பத்தினருடன் இன்று திருமலைக்கு வருகை தந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். திருமலையில் தங்கிய அவர் காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்.


தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த துர்காவுடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அறங்காவலர் குழு உறுப்பினர் பாலு குடும்பத்துடன் உடன் வந்திருந்தார்.

No comments:

Post a Comment