பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த நிதி நிறுவனம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, October 11, 2023

பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த நிதி நிறுவனம்

 


திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், கடன் தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். 


திருப்பூர் வாய்க்கால் மேடு பகுதியில் செயல்பட்டு வந்த என்.கே.பி. என்ற நிதி நிறுவனம் பொதுமக்களிடம் மகளிர் சுய உதவி குழு கடன், தனி நபர்  கடன், வீட்டு கடன், தொழிற்கடன் உள்ளிட்டவைகள் வழங்குவதாக கூறி விளம்பரப்படுத்தியுள்ளது.



இதில் குழு கடன் பெறவேண்டும் என்றால் ஒரு நபருக்கு ஆயிரத்து 341 ரூபாய் தர வேண்டுமெனக் கூறி, வசூல் செய்துள்ளது. அந்த நிறுவனம் வழங்கிய 7 லட்சம் ரூபாய் காசோலையை வங்கியில் கொடுத்த போது, அவை போலியானது என மக்களுக்கு தெரியவந்தது. 


இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் அந்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

No comments:

Post a Comment