நடிகை கவுதமியை ஏமாற்றிய நபருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை- அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"திமுக அரசு பதவியேற்ற பிறகு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜகவினரை கைதுசெய்து வருகின்றனர்.
திமுக அரசு மீது உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் புகார் அளிக்க உள்ளோம். பாஜகவினர் கைது மற்றும் அவர்கள் மீது திமுக அரசின் நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் நாங்கள் புகார் அளிக்க உள்ளோம்.
தேசிய தலைமைக்கு நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் 4 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வர உள்ளது. 4 பேர் கொண்ட குழுவிடம் வருகிற 27-ந்தேதி மாலை பாஜக அலுவலகத்திற்கு வந்து தங்கள் கருத்தை சொல்லலாம். மத்திய குழு, பாதிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகள் இல்லத்திற்கு செல்ல உள்ளனர்.
நடிகை கவுதமி என்னிடம் இன்று காலை கூட பேசினார். அவர் கொடுத்த புகாரில் காவல்துறை ஆமை வேகத்தில் விசாரணை நடத்திவருகிறது. அவரை ஏமாற்றிய நபருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கவுதமியுடன் பாஜக துனை நிற்கும். கட்சியில் இருந்து விலகி இருந்தாலும், பாஜக அவருக்கு தேவையான உதவிகளை செய்யும். அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் நான் செய்ய தயார்." இவ்வாறு அவர் கூறினார்.
No comments