பர்கூர் மலைப்பகுதியில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரையில் இருந்து சின்னசெங்குளம் ஆலேசனப்பட்டி வழியாக 10 கிலோமீட்டர் தூரம் பகுதியில் அமைந்துள்ள குட்டையூர் மலைக்கிராமத்திற்கு வனப்பகுதி வழியாக கரடு முரடான பாதையில் அரசு அதிகாரிகளுடன் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் இந்த ஆய்வுப் பணியின் போது பாலாறு பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு காலத்தில் செல்ல இயலாதநிலையில்,பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல கர்நாடக அரசின் அனுமதி வழங்குவதில் உள்ள சிக்கல்களையும்,பவானிசாகர் தொகுதி கடம்பூர் மாக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தால் இயங்கி வரும் நியாய விலைக் கடை மூலம் பொருட்கள் வழங்குவதில் உள்ள சிரம்மங்களையும்,இரு முனை மின்சாரத் தினால் மின்விளக்குகள் அடிக்கடி சரிவர எரியாத நிலையில் மேலும் மும்முனை மின்சாரம் இல்லாததால் மின்மோட்டார்கள் இயக்கிட முடியாத நிலையில் இருப்பதால் பர்கூரில் இருந்து மும்முனை மின்சாரம் வழங்கிட கோரியும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதனை தொடர்ந்து பழங்குடியின தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மற்றும் காட்டுப்பட்டா வழங்கிட மனுக்களை பெற்றார்.
அதனை தொடர்ந்து வேலாம்பட்டியில் நடைபெற்ற கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் மருத்துவத்துறை, வருவாய் துறை,ஊரக வளர்ச்சி துறை, மின்சார வாரிய அதிகாரிகள், வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments