ஏவிசி கல்லூரி வணிக மேலாண்மை துறை கருத்தரங்கு - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

ஏவிசி கல்லூரி வணிக மேலாண்மை துறை கருத்தரங்கு


மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.கருத்தரங்கிற்கு வணிக மேலாண்மை துறை தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கல்லூரியின் புல முதன்மையர் டாக்டர் எஸ்.மயில்வாகனன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டு முறைகளை பற்றி விளக்கி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஆர். கார்த்திக், விஜி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர் இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


பட விளக்கம்:-

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி வணிக மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

No comments:

Post a Comment