• Breaking News

    தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு

     


    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.


    நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,715 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 45,720 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் 5,700 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,600 ரூபாய் ஆக விற்பனையாகிறது.


    அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 6,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 49,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    No comments