சத்தியமங்கலத்தில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மூன்றாம் ஆண்டு விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் வெற்றி நர்சிங் கல்லூரி, ஜேம்ஸ் கல்வி வளாகத்தில். மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் 3-ம் ஆண்டு விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க சத்தி நகர செயலாளர் S.M.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்க பவானிசாகர் ஒன்றிய செயலாளர் சைமோர் நடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் இவ்விழாவில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர கழக செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இவ்விழாவில் கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ)பா.செந்தில்நாதன் , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S.A.ஜஹாங்கீர் , மனித உரிமைகள் மாநில செயலாளர் Dr.L.சுரேஷ் , வெற்றி நர்சிங் கல்லூரி நிறுவனர் Dr.K.S.ஸ்ரீதர் , Dr.L. லிவிங்டன் தாஸ் , தேசிய பொருளாளர் P.கண்ணன் மற்றும் துப்புரவு பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments