Gojukan karate பெல்ட் டெஸ்ட் தேர்வு குமாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த தேர்வில் தமிழ்நாடு கோஜூ கன் செயலாளர் சிந்தியா பாபு தலைமையில் கிளை பயிற்சியாளர்கள் சென்ஸெய் பாஸ்கர், சென்சாய் குழந்தைவேல் ,பவித்ரா தேவி, எம் சங்கவி ஆகியோர் தேர்வை நடத்தினார்கள்.
இதில்வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ்,திமுக விவசாய அணி நாமக்கல் மாவட்ட துணை தலைவர் சக்திவேல், குமாரமங்கலம் ஊர் நாட்டாமைக்காரர் வடிவேலு, ஆகியோர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்தி பாராட்டி பேசினார்கள், வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் பெற்றோர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments:
Post a Comment