ஈரோடு மாவட்டம் , கவுந்தப்பாடியில் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில், கழக மாணவரணி செயலாளர் CVMP.எழிலரசன் MLA வழிகாட்டுதலின்படி, ஈரோடு வடக்கு மாவட்ட மாணவரணி நடத்திய மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் பாவா திருமண மண்டபம், கவுந்தப்பாடியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் 115 பள்ளிகள் மற்றும் 40 கல்லூரிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவானது மாவட்ட அவைத் தலைவர் அ.பெருமாள்சாமி துவக்கி வைத்தார் . மாவட்ட துணை செயலாளர்கள் கீதாநடராஜன், S.S.குருசாமி, மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர்.M.செந்தில்நாதன், மாநில விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி.மணி, செயற்குழு உறுப்பினர்கள் S.P.புகழேந்தி, V.P.சண்முகசுந்தரம், O.சுப்பிரமணியம், M.S.சென்னிமலை, பொதுக்குழு உறுப்பினர் R.மாதேஸ்வரன், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் கேப்டன்.K.P.துரைராஜ், சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் K.C.P.இளங்கோ, பவானி நகர செயலாளர் ப.சீ.நாகராஜ், கோபி நகர செயலாளரும் , நகராட்சி தலைவர் N.R.நாகராஜ், சலங்கபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் S.பழனிச்சாமி, பெரிய கொடிவேரி பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்மகன்.சிவா, காசிபாளையம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் A.திருவேங்கடம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் S.A.அன்பழகன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் K.G.விஜய் ஆனந்த் , மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் O.N.சுதாகர், சார்பு அணிகளின் துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.
பரிசு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் விவரங்கள் பின்வருமாறு:
பேச்சு போட்டி (பள்ளி)
1. முதல் பரிசு - செல்வி.ஓவியா - அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம்.
2.இரண்டாம் பரிசு - செல்வன்.கவியரசு - அரசு மேல்நிலைப்பள்ளி, குருப்பநாயக்கன்பாளையம்
3.மூன்றாம் பரிசு - செல்வன்.தேவபாலா - அரசு மேல்நிலைப்பள்ளி, புதுப்பாளையம்
பேச்சு போட்டி (கல்லூரி)
1. முதல் பரிசு - செல்வி.சந்தியா – JKK முனிராஜா காலேஜ் ஆப் டெக்னாலஜி, தூ.நா.பாளையம்
2. இரண்டாம் பரிசு - செல்வன்.பா.பிரபு - காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்தி
3. மூன்றாம் பரிசு - செல்வன்.பா.பிரதீப் - JKK முனிராஜா காலேஜ் ஆப் டெக்னாலஜி, தூ.நா.பாளையம்
கட்டுரைப் போட்டி (பள்ளி)
1.முதல் பரிசு - செல்வி.செ.கலைவாணி - அரசு மேல்நிலைப்பள்ளி, செம்புளிச்சாம்பாளையம்
2. இரண்டாம் பரிசு - செல்வன்.அ.சாமிநாதன் - அரசு மேல்நிலைப்பள்ளி.
3. மூன்றாம் பரிசு - செல்வி.தாரிகா - அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலம்பாடி
கட்டுரைப் போட்டி (கல்லூரி)
1. முதல் பரிசு - செல்வன்.க.ஷங்கரன் - காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்தி
2. இரண்டாம் பரிசு - செல்வி.ப.ஜனனி – JKK முனிராஜா காலேஜ் ஆப் டெக்னாலஜி, தூ.நா.பாளையம்
3. மூன்றாம் பரிசு - செல்வி.மு.ஆசியா பேகம் - JKK சம்பூரணியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி - தூ.நா.பாளையம்.
பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவ , மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
மேற்கண்ட போட்டிகளுக்கு பரிசுத் தொகை வழங்கியோர் விவரம் பின்வருமாறு
1. N.R.நாகராஜ் -கோபி நகர செயலாளரும் , கோபி நகராட்சி தலைவர், கோபி
2. ஆர். ஜானகி ராமசாமி - சத்தி நகர செயலாளரும் , சத்தியமங்கலம் நகராட்சி தலைவர், சத்தி .
3. ப.சீ நாகராஜ் - நகர செயலாளர், பவானி
4.P.A.சிதம்பரம் - நகர செயலாளர் மற்றும் நகர் மன்றத் துணைத் தலைவர்,பு.புளியம்பட்டி.
5. K.C.P.இளங்கோ - சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய குழுத் தலைவர்
6. கே.ரவிச்சந்திரன் - பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர், கெம்பநாயக்கன்பாளையம் .
7. தமிழ்மகன் சிவா - பெரிய கொடிவேரி பேரூராட்சி மன்றத் தலைவர்
8. அன்பரசு - பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர், கொளப்பலூர்
9.தமிழ்ச்செல்வி வெற்றிவேல் - பேரூராட்சி மன்றத் தலைவர், காசிபாளையம் .
10. மெடிக்கல் ப.செந்தில்குமார் - ஒன்றிய கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் நம்பியூர் .
11. பழனிச்சாமி - பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர், சலங்கபாளையம் .
12.ஆனந்தகுமார் - பேரூர் செயலாளர் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர், ஜம்பை .
போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முனைவர்.T.K.கிருபாகரன் வரவேற்புரை நல்கி விழாவினை தொகுத்து வழங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்களான S.வினோத்குமார், K.செந்தூர்,S.சுதா, M.நவீன்குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்பட்டார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .
No comments:
Post a Comment