நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வலிவலத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.பாஜக நாகை மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலையில் திமுக அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகி சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் தங்களது கட்சி கொடியை ஏற்ற அனுமதி கோரிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதி தர மறுத்தனர். மீறி பாஜகவினர் கொடியேற்றாமல் இருக்க டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ஆனந்தராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசாரர்கள் குவிக்கப்பட்டனர்.
கொடியேற்ற தரப்பில் அனுமதி தராத நிலையில் கொடியேற்றாமல் கொடியை கட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கினர். அப்போது கட்சித் தொண்டர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்க பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க என கோசங்கள் எழுப்பினர்.என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட செய்திக்காக
க.சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment