மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.அந்த நிறுவனத்தின் சார்பில் விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர்.தற்போது பழுது ஏற்பட்டு குடிநீர் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களின் புகாரை தொடர்ந்து குத்தாலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சிவசங்கரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.அதன்படி உடனடியாக பழுது சரி செய்யப்பட்டு தற்போது விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது . உரிய நடவடிக்கை மேற்கொண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Monday, November 6, 2023
Home
மயிலாடுதுறை மாவட்டம்
ஓஎன்ஜிசி குடிநீர் ஏடிஎம் பழுது நீக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது
ஓஎன்ஜிசி குடிநீர் ஏடிஎம் பழுது நீக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment