சாத்தூரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது
தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் சார்பாக சுற்றுச்சூழலை பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே உள்ள ராம்கோ வித்யாலயா பள்ளியில் தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் சார்பாக சுற்றுச்சூழலை பாதுகாப்பை வலியுறுத்தி பள்ளிகளுக்கு இடையேயான ரோலார் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியானது ரோடுரேஸ் மற்றும் ரிங் ரேஸ் வடிவிலான போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இப்போ போட்டியில் ராஜபாளையம் ஆனந்த வித்யாலயா நர்சரி பள்ளியும், எஸ்.பி.கே.பள்ளி அருப்புக்கோட்டை பள்ளியம் முதலிடம் பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. இப்போட்டியில் பங்குபெற்ற ராம்கோ வித்யாலயா பள்ளி இரண்டாம் இடத்தை பெற்றுசாம்பியன் கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றுச் சென்றது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேசன் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ வித்யாலயா பள்ளி தாளாளர் மற்றும் சாரா தங்கமாளிகை உரிமையாளர் ராம்கோ பள்ளி முதல்வர் சிவானந்த் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் சார்பாக நன்றியுரை ஆற்றினார்.
No comments