திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா முகாமும் நடந்தது. திரு சின்னத்தம்பி முதுநிலை எழுத்தாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருகிலுள்ள கிராமம் சென்னை சமுத்திரம் ,தி தாண்ட பட்டு வளையம்பட்டு, காயம் பட்டு வலசை, மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சின்னத்தம்பி அவர்கள் விவசாய மக்களுக்கு நகை கடன் ,கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவி குழு கடன் ,மத்திய காலக் கடன், இது போன்ற பல்வேறு கடன்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சார்பாக விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் வேளாண்மை கூட்டுறவு நியாய விலை கடை விற்பனையாளர்கள் கே .வெங்கடேசன் ,எம். திருவேங்கடன்,வே.வெங்கடேசன், ஏழுமலை ,ஷா முஹம்மது ,மற்றும் கணினி உதவியாளர் ஆர். உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.
செங்கம் செய்தியாளர் எஸ். சஞ்சீவ்
No comments:
Post a Comment