'விடுதலை 2' படப்பிடிப்பு தாமதமாக இது தான் காரணம் - இயக்குநர் வெற்றிமாறன் - MAKKAL NERAM

Breaking

Saturday, December 23, 2023

'விடுதலை 2' படப்பிடிப்பு தாமதமாக இது தான் காரணம் - இயக்குநர் வெற்றிமாறன்

 


சென்னை சர்வதேச திரைப்பட விழா வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படுவது வழக்கம்.


இந்த வருடம் 57 நாடுகளிலிருந்து மொத்தம் 127 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று, இதில் பங்கெடுத்த தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் வெற்றிமாறன் பெற்றார்.

விருது பெற்ற பின்பு அவர் பேசுகையில், “படத்தின் கதைக்களத்தை பாதிக்காதபடி சில சமரசங்கள் செய்கிறோம். அதனால் அவை சில நேரங்களில் சாதாரணமான படங்களாக வெளிவரும். நிறைய குறைகள், தவறுகளோடுதான் படங்களை எடுத்து முடிக்கிறோம். கதையின் நோக்கம், அதன் குறைகளை மறக்கடிக்கச் செய்கிறது. அதற்குத்தான் இந்த பாராட்டுகளும் அங்கீகாரமும் என நான் நம்புகிறேன். 'விடுதலை' போன்ற படத்துக்கு இந்தப் பாராட்டு கிடைப்பது மகிழ்ச்சி” என்றார்.


மேலும், இயற்கையான பனிப்பொழிவில் நூறு நாட்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க முயற்சித்து முடியாததால் செயற்கை பனிப்பொழிவை உருவாக்கினோம்" என்றார். இதனால்தான் ‘விடுதலை2’ திரைப்படம் தாமதமாகியுள்ளது" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment