வாணிப்புத்தூர் பேரூராட்சியில் மக்களுடன்முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமை அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Saturday, December 23, 2023

வாணிப்புத்தூர் பேரூராட்சியில் மக்களுடன்முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமை அந்தியூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்



 ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி  TN.பாளையம் ஒன்றியம் வாணிப்புத்தூர்  பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமை  அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் முகாமை துவக்கி வைத்து முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் .


மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம்   இந்த சிறப்பு வாய்ந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். 


இந்த முகாமில் தமிழ்நாடு எரிசக்தி துறை மின்சார வாரியம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உள் மதுவிலக்கு மற்றும் காவல் துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்த கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர் உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாமிலேயே தீர்வு காணப்பட்டது.


உடன் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய  செயலாளர் எம் .சிவபாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், வாணிப்புத்தூர்  பேரூர் கழக செயலாளர் சேகர் ( எ) கே.எஸ்.பழனிச்சாமி , வாணிப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் டி.எம்.சிவராஜ்  மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment