கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - MAKKAL NERAM

Subscribe Us

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 26, 2023

கடலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 


உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 'சிவ சிவ' கோஷங்களுடன் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


நாளை(புதன்கிழமை) ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.


இந்த நிலையில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்திற்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here