• Breaking News

    துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிருஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டம்


    துபாய் , ஐக்கிய அரபு அமீரகத் துபாய் ஊத் மேத்தா  பகுதியில் உள்ள பிரியாணி 2020 ஹோட்டலில்  அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில்  மிக பிரமாண்டமான கிருஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல்,  குழந்தைகளின் கிருஸ்துமஸ் ஆடை அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தஸ்லிமா  மற்றும்  மாலினி தொகுத்துவழங்க அமீரக தமிழ் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில்  சிறப்பாக நடைபெற்றது 


    இந்நிகழ்ச்சியில் .சிறப்பு விருந்தினர்களாக  கேப்டன் தொலைக்காட்சி புதுகை ஸ்டார் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் , தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் தலைமை  நிருபர் நஜீம் மரிக்கா,திருச்சி  கோல்ட்  நிறுவனர் ஷமீம், டாக்டர் மீனா, அல் முரன் குரூப் சத்யசீலன், A2B ராஜு மந்திரி, தொழிலதிபர் பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, லாபிங் கிளப் நிர்வாகிகள் சமீர், ஆஸ்கர், நிஜாம், கல்ப் கட்ஸ் பிரவீன் ஜாய் மற்றும் குழுவினர், கூத்தாநல்லூர் தாஹிர், டிக்டாக் பிரபலங்கள்  உள்ளிட்ட பலர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்  ஆயிரத்திற்குமேற்பட்டோர்  கலந்துகொண்டார்.


    இந்நிகழ்ச்சியில் அமீரக வசிக்கும் தமிழ் பாடக பாடகர்கள் GK, நாகதேவன், மாலினி மிருதுளா ரமேஷ்  , வள்ளி, ஜனனி, விக்னேஷ், அழகு சாமிகிஷா மற்றும் பலரின் பட்டு கச்சேரி உள்ளிட்டவைகள் மேலும் சண்ட்டோ தாத்தாவின் வருகை மற்றும் சிறுமி சமீயுக்ஸா நடனம்  உள்ளிட்டவைகள் பலரை கவர்ந்தது.

    நிகழ்ச்சியின் நிறைவாக  அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி  ஷீலா நன்றி  கூறி நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் கொடுத்து மேலும்  நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும்  நன்றிகளையும், கிறிஸ்மஸ் /புத்தாண்டு  வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 



    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments