புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அருகேயுள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் இணைந்து நடத்திய போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ப்பேரணி ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி நடைபெற்றது.கல்லூரி முதல்வர்(பொ) பேராசிரியர் வீ.பாலமுருகன் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மு.மார்டின் லூதர் கிங் அவர்கள் பேரணியைத் தொடங்கி வைத்து, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மு மார்டின் லூதர் கிங் அவர்கள் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பாரத ஸ்டேட் வங்கி அருகில் நிறைவுற்றது.பேரணியில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு விளம்பர பதாகைகளை தாங்கி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டபடியும்சென்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆவுடையார்கோயில் காவல்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
முன்னதாகக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் ப.செந்தில்குமார் வரவேற்றார். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ( அலகு- 1) மு.பழனித்துரை நன்றி கூறினார்.
போட்டிகள் மற்றும் பேரணி ஏற்பாடுகளைக் கல்லூரிப்பேராசிரியர்கள் ட்டி.அன்பரசன், ரா.ராஜலட்சுமி ஆகியோர் வழிகாட்டுதல்படி, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மாணவர்கள் மற்றும் தமிழ்த்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment