குத்தியாலத்தூர் ஊராட்சியில் அங்கன்வாடி பள்ளியை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Saturday, December 23, 2023

குத்தியாலத்தூர் ஊராட்சியில் அங்கன்வாடி பள்ளியை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்,  ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட  ரூ.8.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி சமையல் கூடத்தையும், அத்தியூர்புதூரில் ரூ.15. இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட, அங்கன்வாடி பள்ளியையும், ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, மேலும்  அத்தியூர் கோம்பைத் தொட்டி பகுதியில் ரூ.41.80. இலட்சம் மதிப்பில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும்,  சத்தி தெற்கு  தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோ பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சு.பிரேம்குமார் (கி.ஊ),  வட்டார வளர்ச்சி அலுவலர் அ.அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .

 உடன் சத்தி வடக்கு  தி.மு.க.  ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் , முன்னால் ஊராட்சி செயலாளர் ஐ. ஏ.சேகர்  , பொறியாளர் திரு.முருகன். தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர்கள், ஒப்பந்ததாரர், செல்வராஜ். மற்றும் திமுக நிர்வாகிகள்,  ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment