தமிழக அரசின் சார்பில் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு பருவத்திற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி தரப்படுகிறது. மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களாக ஒவ்வொரு பருவத்திற்கும் மதுரைக்குச் சென்று பயிற்சி பெற்று வரும் விரிவுரையாளர்கள் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டும் விதமாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மா.கா.சே. சுபாஷினி முன்னிலை வகுத்தார். அதன் பின்னர் மாநில முதன்மை கருத்தாளராக செயல்பட்ட 24 ஆசிரியர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆய்வாளர் திரு ராமநாதன், விரிவுரையாளர்கள் திருமதி தேன்மொழி,திரு பாலாஜி மற்றும் பெலோஷிப்கள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ரவிசங்கர் நன்றி உரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது.மேலும் இந்நிகழ்வில் கீழ்வேளூர் வட்டார சார்பில் பாராட்டு சான்றிதழ் பெற்ற நாகலூர் பள்ளி ஆசிரியர் அருள் ஜோதியை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மணிகண்டன்,சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க
புகைப்பட நிருபர் ஜெயபிரகாஷ்.அ
No comments:
Post a Comment