• Breaking News

    ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

     


    கடந்த இரண்டு நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.47,320 விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



    நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,850 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,800 ரூபாயாகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் 5,915 ரூபாயாகவும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 47,320 ரூபாயாகவும் விற்பனையாகிறது.


    அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 6,385 ரூபாய்க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 51,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



    வெள்ளி விலை 1 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 83.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 83,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    No comments