பிரபல காமெடி நடிகர் போண்டா மணி காலமானார் - MAKKAL NERAM

Breaking

Sunday, December 24, 2023

பிரபல காமெடி நடிகர் போண்டா மணி காலமானார்

 


பாக்யராஜ் நடிப்பில் வெளியான பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமானவர் போண்டா மணி.


சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார்.


கிட்னி செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


இவரின் மருத்துவ செலவுக்கு பிரபலங்கள் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் உதவி செய்தனர். 


இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  தற்போது போண்டா மணியின் இறப்பு செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment