உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..... இன்று காலை தொடங்குகிறது..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 17, 2024

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..... இன்று காலை தொடங்குகிறது.....

 


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.


இதைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இன்று மாலை 5 மணி வரை போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் சிறப்பாக களம் காணும் வீரருக்கும், வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment