ஸ்ரீரங்கம் வருகை தரும் பிரதமர் மோடி..... உச்சகட்ட பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசனை...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 17, 2024

ஸ்ரீரங்கம் வருகை தரும் பிரதமர் மோடி..... உச்சகட்ட பாதுகாப்பு குறித்து போலீசார் ஆலோசனை......

 


அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு முதல் நாளான 21-ந் தேதி பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.


ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னதாக 108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசித்துவிட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.


பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும், பிரதமர் விமான நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment