எனக்கு லோன் கிடைக்குமா..... வங்கிக்குள் புகுந்த காளை மாடு..... ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்......
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் இருந்த போது, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென காளை மாடு ஒன்று வங்கி கிளைக்குள் சாவகாசமாக நுழைந்து கதவின் அருகே நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களும், வங்கி ஊழியர்களும் அலறியடித்து பாதுகாப்பிற்காக ஓடத் துவங்கினர்.
அமைதியாக நின்று கொண்டிருந்த காளையை விரட்ட யாரும் முயற்சி செய்யவில்லை. இந்நிலையில் திடீரென அந்த காலை சாவகாசமாக வங்கி கிளைக்குள் நடமாடத் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களும், வங்கியின் பாதுகாவலரும், மாட்டை வெளியில் துரத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதிக எடை கொண்ட மிகப்பெரிய மாடாக இருந்ததால் அவர்கள் அருகில் செல்லாமல் அதனை விரட்ட முயற்சித்தனர். சிறிது நேரம் கழித்து அந்த மாடு அங்கிருந்து வெளியேறிச் சென்றது.
இந்நிலையில் இந்த சம்பவங்களை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் படம் பிடித்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தார். தற்போது அந்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகிறது. மற்றொரு மாடுடன் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து இந்த மாடு வங்கி கிளைக்குள் நுழைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
No comments