மல்லியம் பகுதியில் ரூ.2 கோடி 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா - எம்எல் ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து மல்லியம்,மற்றும் வானாதிராஜபுரத்தை இணைக்கும் பகுதியான காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது.வானாதிராஜபுரம், கடலங்குடி, மூவலூர், காளி, திருமங்கலம், அஞ்சாறுவர்த்தாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய பிரதான இணைப்பு பாலமாக இந்த பாலம் அமைந்திருந்தது.இந்தப் பாலம் பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டதால் இதனை இடித்து புதிய பாலம் கட்டித் தர அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கை ஏற்ற சட்டப்பேரவை உறுப்பினர் கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் கட்டித் தர இன்று பூமி பூஜை நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் அடிக்கல் நாட்டில் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக பொறுப்பாளர் மூவலூர் மூர்த்தி, குருசேவ்,ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments