• Breaking News

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தலைமைத் தேர்தல் அலுவலகம் திறப்பு....... 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறை.......

     


    சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு பூஜைகள், கோ பூஜைகள் உடன் பாஜக கொடியை ஏற்றி இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து தொகுதி பொறுப்பாளர்களுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்,பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப் பட்டுள்ளது. இன்டர்நெட், கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments