வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 உதவித்தொகை......
தமிழகம் முழுவதும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ₹200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹400, பட்டதாரிகளுக்கு மாதம் ₹600 வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற வேலை இல்லாத இளைஞர்கள் இணையத்தில் விண்ணப்பித்து இந்த பணத்தை பெறலாம்.
No comments