நாகை மாவட்டத்தில் பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி - மகளிர் சுய உதவி குழு பெண்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவின் பேரில் இன்று பாலின வன்முறைக்கு எதிரான சமத்துவ உறுதிமொழி, நிகழ்வு நடைபெற்றது. இதில் நாகை,கீழ்வேளூர்,கீழையூர்,வேதாரணியம்,திருமருகல், தலைஞாயிறு ஆகிய வட்டாரங்களிலிருந்து மகளிர் சுய உதவி குழுக்களில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அவுரி திடலில் இருந்து பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்று நாகை நகராட்சி அலுவலகம் முன்பு வட்டமிட்டு கோஷமிட்டனர்.
1)குழந்தை திருமணத்தை ஒழிப்போம்.
2)குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்.
3)வன்முறைக்கு எதிராக அணி திரள்வோம்.
4)பெண் உரிமையை பாதுகாப்போம்.
5)பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார்.உதவி திட்ட அலுவலர் இந்திராணி வரவேற்புரை யாற்றினார் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.சமுதாய வள பயிற்றுனர் ஸ்ரீரங்கபாணி நன்றியுரையாற்றினார்.
நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி
No comments