பைஜுஸ் நிறுவனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..... அமலாக்கத் துறை அதிரடி...... - MAKKAL NERAM

Breaking

Thursday, February 22, 2024

பைஜுஸ் நிறுவனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..... அமலாக்கத் துறை அதிரடி......


 கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆன்லைன் கல்வி நிறுவனம் பைஜுஸ். இதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமானவர் பைஜு ரவீந்திரன் (43). பைஜுஸ் நிறுவனம் ரூ.9,300 கோடிக்கும் அதிகமாக அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத் துறைக்கு புகார்கள் வந்தது.

இந்நிலையில் இந்த புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, பைஜு ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பரில் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியது, அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்ட வணிக நடவடிக்கை ஆவணங்களை அமலாக்கத் துறை வசம் சமர்ப்பிக்க பைஜுஸ் தவறிவிட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டும் அமலாக்கத் துறை விசாரணையை துவங்கியது.இந்நிலையில் பைஜுவின் உரிமையாளர் பொறுப்புகளிலிருந்து பைஜு ரவீந்திரன், அவரது குடும்பத்தினரை வெளியேற்ற சில முதலீட்டாளர்கள் 'திங்க் அண்டு லேர்ன் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தை நேற்று கூட்டினர். இக்கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி பைஜு ரவீந்திரன் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் பைஜு ரவீந்திரனின் கோரிக்கையை நேற்று நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், பைஜு ரவீந்திரனுக்கு எதிராக கடந்த ஆண்டே அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டிருந்தது. அந்த நோட்டீஸின்படி, பைஜு ரவீந்திரன் வெளிநாட்டுக்கு சென்று வரும் தகவல்களை, இமிகிரேஷன் அதிகாரிகள் அமலாக்கத் துறைக்கு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமலாக்கத் துறை இன்று மீண்டும் புதிதாக லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டுள்ளது. இந்த நோட்டீஸானது ஃபெமா விசாரணைக்கு பைஜு ரவீந்திரன் ஒத்துழைக்காததால், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment