பொன்னமராவதி ஆர்.பாலகுறிச்சி அருகே ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளியில் ஆண்டு விழா,விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Thursday, February 22, 2024

பொன்னமராவதி ஆர்.பாலகுறிச்சி அருகே ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளியில் ஆண்டு விழா,விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆர்.பாலகுறிச்சி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளியில் ஒன்பதாமாண்டு ஆண்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது.ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளி கலையரங்கில் நடைபெற்ற ஒன்பதாமாண்டு ஆண்டு விழா,விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நாகலெஷ்மி தலைமை தாங்கினார்.இடைநிலை ஆசிரியர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.பின்னர் தொடங்கிய ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும் முன்னாள் மாணவர்கள்,ஊர் பொதுமக்களுக்கு இசை நாற்காலி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல்,பெண்ணுக்கு பொட்டு வைத்தல்,உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகள்,ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.இவ்விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் முக்கியஸ்தர் கணபதி ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியரின் தலையாய பணியினை பாராட்டி கெளரவித்தார்.விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு‌ தலைவி பொன்னம்மாள்,வார்டு உறுப்பினர் சரீனா பேகம், பெற்றோர்கள், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அப்பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி மேலாண்மைக்குழு‌வினர்,ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மேலாண்மைக்குழு‌ தலைவி பொன்னம்மாள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


இரா.பாஸ்கர்  செய்தியாளர்


No comments:

Post a Comment