தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பாஜக-வின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள் - பிரதமர் மோடி
பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
கொங்கு பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் பொருளாதாரத்திற்கு கொங்கு பகுதி முக்கிய பங்கை வழங்கி வருகிறது. ஜவுளி மற்றும் தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக பல்லடம் உள்ளது. இந்த கூட்டத்தில் மிகப்பெரிய அளவில் கூடியுள்ள மக்களுக்கு நன்றி. என் மண் என் மக்கள் யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. 2024-ல் தமிழகத்தில் பா.ஜ.க.வை மட்டும்தான் அதிகமாக பேசுகின்றனர். 2024-ல் தமிழகம் புதிய சரித்திரத்தை படைக்கும். ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும். டெல்லியில் ஏ.சி. அறையில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.தமிழகத்தின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு என்னுடைய வாழ்த்துகள். நாடுதான் முழுமையானது என பா.ஜ.க. கருதுகிறது. என்னை பொருத்தளவில் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் மிக சிறப்பானதாக இருக்கிறது. தமிழக மக்கள் இதயத்தால் சுத்தமானவர்கள், புத்திசாலிகள்.பல ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளை அடித்தவர்கள், பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து பயப்படுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதபோதும், தமிழகத்தை தன் இதயத்தில் பா.ஜ.க. வைத்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழகத்திற்கு 3 மடங்கி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. ஐ.மு. கூட்டணி ஆட்சியில் பெரிய அமைச்சரவைகளில் அமைச்சர்களாக இருந்தபோதும் தி.மு.க. எதுவும் செய்யவில்லை. எம்.ஜி.ஆரை அவமதிப்பதுபோல் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பா.ஜ.க.தான். இவ்வாறு அவர் பேசினார்.
No comments