தமிழகத்தில் பாரத் அரிசி விற்பனை எப்போது....?

 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சாமானிய மக்களை கவரும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாரத் அரிசி இந்த வாரம் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசியின்  சராசரி சில்லறை விலை ஒரு கிலோ 43.5 ரூபாயாகும். முந்தைய ஆண்டை விட இது அதிகம். பாரத் அரிசி வாங்குவதற்கு ரேஷன் கார்டு தேவை இல்லை. மக்கள் ஒரே நேரத்தில் 10 கிலோ வரை வாங்கலாம். இந்த வாரம் பாரத் அரிசி வழங்கப்படும் நிலையில் மற்ற பொருட்களும் வரும் மாதங்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments